’கடந்த 2001ல், சர்சைக்குரிய டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வெழுதிய, 800 பேரின் விடைத்தாள்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,) சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 1 தேர்வு நடத்தப்பட்டது. இவர்களில் 83 பேர், துணை கலெக்டர், வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யும்படி, நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த ஐகோர்ட், கடந்த 2011ல், இந்த 83 பேரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் ரத்து செய்தது. ஆனாலும், பின், இந்த 83 பேரும், தங்கள் பணிகளில் தொடரலாம் என, இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் அனில் தாவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, ’பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 83 பேரும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டனர். இந்த நிலையில், அவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்வது கேலிக்கூத்தானது. எனவே, 83 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்யக் கூடாது,” என்றார்.
இதன் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தேர்வெழுதிய, 83 பேரின் விடைத்தாள்களையும், வரும் ஜனவரி 22க்குள், சீலிடப்பட்ட உறையில் வைத்து, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடு நடந்துள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, இந்த விடைத்தாள்களை யு.பி.எஸ்.சி., ஆய்வு செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக