ஓய்வூதிய தொகை பிடித்தம் செய்த தொகைக்கான கணக்கீட்டு தாள் வழங்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகன சுந்தரத்திடம் அளித்த கோரிக்கை மனு அளித்தனர்.அதில் 2003ம் ஆண்டு முதல் தொடக்க கல்வி துறையில் பணி புரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பங்கீட்டு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாத ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் பத்து சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றது.
2003ம் ஆண்டு முதல் இது வரை பிடித்தம் செய்து வரப்படும் அந்த தொகைக்கான கணக்கீட்டு தாள் வழஙகப்படவில்லை. தமிழ்நாட்டில் பெருபாலான மாவட்டங்களில் அந்த கணக்கீட்டு தாள் வழங்கப்பட்ட நிலையில் நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டாரம் தவிர மற்ற வட்டாரங்களில் இதுவரை கணக்கீட்டு தாள் வழங்க்ப்படவில்லை.எனவே கணக்கீட்டு தாள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக