லேபிள்கள்

21.11.14

கல்வி உதவித்தொகை முறைகேடு:16 பேருக்கு சிக்கல்

நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்த மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோரின், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில், கடந்த சில ஆண்டுக்கு முன், 68.46 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது.
இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த, 79 தலைமையாசிரியர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.இது தொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 79 தலைமையாசிரியரை, கடந்த 2012ம் ஆண்டு, ஆக., மாதம், 'சஸ்பெண்ட்' செய்தனர். பின், ஆறரை மாத இடைவெளிக்கு பின், மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.எனினும், துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதில், 63 பேர் தவிர, குற்றவியல் வழக்கில் சிக்கிய, 16 பேரின் பிரச்னை தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக