உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பி.இ.எம்.எல்., ஆங்கில பள்ளியை காப்பாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் ஊர்வலமாக சென்று, தங்கவயல் கல்வி அதிகாரியிடம் மனு வழங்கினர்.
தங்கவயல், உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இயங்கி வந்த, பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில், பல்வேறு பகுதிகளில் இருந்தும், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தங்க சுரங்கம் மூடப்பட்ட பின்னர், சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஜி.எம்.எல்., மருத்துவமனையும், பி.ஜி.எம்.எல்., அரசு பள்ளியும் மூடப்பட்டு விட்டன. தற்போது, பி.இ.எம்.எல்., அரசு ஆங்கில உயர்நிலைப் பள்ளியையும் மூடி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். இந்நிலையில், பள்ளி மாணவர்கள், ரயில் நிலையம், ராபர்ட்சன்பேட்டை சுராஜ்முள் சர்க்கிள், காந்தி சர்க்கிள் மற்றும் ராஜ்குமார் சர்க்கிள் வழியாக, கல்வி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, கல்வி அதிகாரி வெங்கட்ராம ரெட்டியிடம் மனு வழங்கினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக