சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கூறியது:
தமிழகம் முழுவதும் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிகழாண்டில் தரம் உயர்த்தப்படும் என்று 19.07.2014-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் தொடர்பான அரசாணையை அக்.31-ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இந்த அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக