லேபிள்கள்

7.3.15

தருமபுரி மாவட்டம் அரூரில் மார்ச் 10-இல் உள்ளூர் விடுமுறை

  1. தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் வருகிற 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம், அரூர் தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத் தேர்த்திருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.இத்திருவிழாவில் அந்தப் பகுதி மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய தினம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மார்ச் 28-ஆம்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.மேலும், உள்ளூர் விடுமுறை நாளன்று அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கருதிசார் நிலைக் கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்டப் பணியாளர்களோடு செயல்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக