லேபிள்கள்

5.3.15

வேலை வாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு

தமிழகம் முழுவதும், 43 லட்சம் பெண்கள் உட்பட, 85 லட்சம் பேர்வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். பல்வேறு சிக்கல்கள், கவனக் குறைவால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில், வேலைவாய்ப்பகங்கள் பட்டியலில், 10 லட்சம் பேர் வரை குறைந்து உள்ளது. புதுப்பிக்க தவறி, பதிவு மூப்பை இழந்து விடுவதால், தகுதியிருந்தும் வேலைவாய்ப்பு பறிபோகிறது. இது போன்று, 2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம்தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என, அரசு சிறப்புச் சலுகை அறிவித்துள்ளது. விடுபட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணையதளம் வாயிலாகவும் புதுப்பித்து வருகின்றனர். 'அரசின் சிறப்புச் சலுகை முடிய, இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், புதுப்பிக்கத் தவறியோர் வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள்; மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரக அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக