லேபிள்கள்

2.3.15

கணினி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு

கணினி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் மார்ச் 2 ஆம் தேதி கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-
செயலர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற ஆணையின்படி, மாநில வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. எதிர்பாராத காரணங்களால், தங்களுக்கு உரிய சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி நாளான மார்ச் 2 ஆம் தேதி கலந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக