லேபிள்கள்

6.3.15

தனித்தேர்வுக்கு வற்புறுத்தும் தனியார் பள்ளிகள்; கலெக்டரிடம் முறையீடு

பிளஸ் 2 தேர்வு, திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியில் நேற்று நடந்தது; கலெக்டர் கோவிந்தராஜ், முதன்மை கல்வி அலுவலர்
முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. காரில் கலெக்டர் ஏற முற்பட்டார். 
அங்கு காத்திருந்த, வாலிபாளையம் கோர்ட் வீதியை சேர்ந்த தர்மராஜ், கலெக்டரிடம் சென்று கதறி அழுதார்.அவரிடம் விசாரித்தபோது, “திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில், எனது மகன்கள் நவீன்குமார், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் பத்தாம் வகுப்பு படித்தனர். படிப்பில் பின்தங்கியுள்ளதால், பொதுத்தேர்வில் 100 சதவீத இலக்கை பள்ளி எட்ட முடியாது என கூறிய ஆசிரியர்கள், இங்கு தொடர்ந்து படிக்கட்டும்; பொதுத்தேர்வு மட்டும், தனியார் பயிற்சி பள்ளி வாயிலாக, தனித்தேர்வராக எழுதட்டும்.அதற்கான ஏற்பாட்டை செய்து விடுகிறோம் என்று கூறினர்.“ஜெய்வாபாய் பள்ளியில் நடந்த செய்முறை தேர்வுக்குச் சென்றபோது, அவர்களது பெயரோ, தேர்வு எண்ணோ இல்லை என திருப்பி அனுப்பி விட்டனர். “எனது மகன்களின் படிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டியதால், அவர்களின் எதிர்காலம் பாதித்துள்ளது,” என கூறி, கதறி அழுதார். பரிதாபப்பட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலரை அழைத்து, விசாரிக்க உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக