மத்திய குழந்தைகள் திருமண தடைச் சட்டம் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் காதரின் மகளுக்கு கடந்த
17.11.2012 அன்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது,
அந்தச் சிறுமிக்கு 18 வயது நிறைவடையவில்லைஎன சமூகநலத் துறை அதிகாரிக்கு புகார் சென்றது. இதையடுத்து சிறுமியின் திருமணத்தை அதிகாரி கள் தடுத்து நிறுத்தினர். பின்னர், அந்தச் சிறுமிக்கு 18 வயது நிறைவாகும்வரை திருமணம் செய்யக்கூடாது என பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய் யக்கோரி அப்துல் காதர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சமூகநலத் துறை அதிகாரி விளம்பரம் பெறும் நோக் கத்தில் திருமணத்தை தடுத்துள் ளார். முஸ்லிம்களுக்கு தனிச் சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் அடிப்படையில், முஸ்லிம் பெண்ணுக்கு அவர் பருவம் அடைந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம். மத்திய குழந்தை திருமண தடைச் சட்டம் பொதுவான சட்டம். அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்றார்.இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அங்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு:மத்திய குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஒரு மதச் சார்பற்ற சட்டமாகும். அந்த சட்டத்தின் அடிப்படையில் 18 வயது நிறைவடையாத பெண் ணுக்கு திருமணம்செய்து வைக் கக்கூடாது. மேலும், இந்தச் சட்டம் முஸ்லிம்கள், இந்துக்களின் தனிச் சட்டங்களுக்கு அப்பாற் பட்டது. குழந்தைகள் திரு மணத்தை பொருத்தவரை முஸ்லிம்களுக்கு அவர்களின் தனிச் சட்டம்தான் பொருந்தும் என்பதை ஏற்க முடியாது.சிறப்பு காரணங்களுக்காக குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
குழந்தைகளின் உடல் நலன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள் திருமணச் சட்டத்தைமேலும் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். குழந்தை களுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குழந்தைகள் திருமணம் எனும் தீய பழக்கத்தை தடுக்க முடியும். இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலன், பெண்ணின் கவுரவம் ஆகியவற்றைஉயர்த்த முடியும். இதுபோன்ற திருமணங்களை தடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம்உண்டு.மத நம்பிக்கை வேறு, உரிமை கள் என்பது வேறு. குழந்தை களுக்கு திருமணம் செய்து வைப்பது தங்களது உரிமை எனக் கூற முடியாது. குழந்தைகள் நலன், முன்னேற்றம் முக்கியமா அல்லது குழந்தைகள் திருமணமா என்ற கேள்விகள் எழும்போது, குழந்தைகளின் நலன், முன் னேற்றம்தான் முக்கியம். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக