சமீபத்தில் ஆசிரியர் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, கற்பித்தல் முறையில் புதிய கருவியாகச் செல்போன் அமைந்திருப்பதை அறிந்தேன்.
செல்போன் என்பது வெறும் தகவல்தொடர்புச் சாதனமாக இல்லாமல், கல்வித்துறையில், முக்கியமாகக் கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய நீண்ட உரையாடல் புதிய உத்வேகத்தை அளித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதில் ’வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது எப்படி?’ என்ற வரிதான் மீண்டும் மீண்டும் உரையாடலில் எழுந்த ஒரு தேடல்.
முதலில் வகுப்பறை என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வகுப்பறை என்பது நான்கு சுவர்களால் சூழ்ந்த, இருக்கைகள் வரிசையாக அமைந்த, கவனிக்கும் மாணவர்களால் நிரம்பிய, கற்பிக்கும் ஆசிரியரால் அமைந்த அறை என்பது மரபான ஒன்று. தற்போது அப்படி இல்லை என்பதுதான் நிஜம். உண்மையில் தற்போதைய வகுப்பறை என்பது கற்பித்தல்-கற்றலுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது. அதரப்பழசான கல்விக் கற்பித்தல் செயல்பாடுகள் மறந்துவிட்டு, ப்ரொக்ஜடரில், கணினியில் பாடம் கற்பிக்கும் ஸ்மார்ட் க்ளாஸ் திட்டம் பல்வேறு தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் சிறுபான்மையாக நடைமுறையில் உள்ளது. இது இரண்டும் இல்லாமல், செல்போன் வழியாகப் பாடம் சம்பந்தமான விளக்கங்களைத் தேடிக் கற்கும் கற்பிக்கும் தன்மையும் நடக்கிறது. எனவே வகுப்பறை என்பது தேடலுக்கான வழி என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இரண்டாவதாக ஆசிரியர் என்பவர் வெறும் புத்தகத்தை வாசித்துவிட்டு, கரும்பலகையில் எழுதிக் கற்பிப்பவராக இன்றைய நடைமுறையில் தொடர்வது என்பது அதரப் பழமையானது. தற்போது தனியார் பள்ளிக்கு இணையாகப், பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பவர்பாயின்ட், ஃப்ளாஷ் கொண்டு பாடம் நடத்துபவர்களாக மாறிவிட்டனர். இன்னும் சொல்லப்போனால் தோல்பாவையை, பொம்மலாட்டத்தை வைத்துப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
செல்போன் என்பது கற்பித்தலுக்கு எதிரான, பள்ளிக்கு எதிரான ஒரு கருவி அல்ல. அது ஒரு கத்தி. பழம் நறுக்கவும் பயன்படும், ஆளைக் கொல்லவும் பயன்படும். பள்ளிக்கூடத்தில் அது பழம் நறுக்கவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காகச் செல்போனையே பயன்படுத்தக்கூடாது என்பது, ஒரு கற்பித்தல் கருவியை நாம் கண்மூடித்தனமாகத் தடை செய்கிறோம் என்பதாக அமைகிறது. ஏன் ஒரு செல்போனைப் பயன்படுத்துகிறோம் என்பதற்குச் சில உதாரணங்கள்….
எனது ஆங்கில ஆசிரிய நண்பர் ஒருவர் அமெரிக்கன் இங்கிலிஷ் வேர்ட்ஸ், பிரிட்டன் இங்கிலிஷ் வேர்ட்ஸ் பற்றிப் பாடம் நடத்தும்போது, மாணவர் கேட்டது – “இரண்டையும் நாம் ஏன் கம்பேர் பண்ணவேணும்?“. பிறகு ஆசிரியர் தன் செல்போனை எடுத்து இரண்டு நாட்டு ஆங்கிலமும் நம்மில் எவ்வாறு கலந்து இருக்கிறது என்பதையும், அதற்கான செய்திகளையும் காட்டியுள்ளார். அதில் ஒரு வார்த்தைக்கான அமெரிக்க இங்கிலிஷ், பிரிட்டன் இங்கிலிஷ் வேர்ட்ஸ் உச்சரிப்பைச் செல்போனில், கூகுள் தேடுபொறிவழியாகக் காட்டியுள்ளார். அந்த மாணவனுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் கூடிவிட்டதாம். அடுத்த பாடவேளையில் மாணவனிடம் அவர் கேள்விகள்கேட்க, பதில் சரியாக வந்ததாம். இப்படி பலவிதமான கற்பித்தலுக்கான கல்விசார் கற்பித்தல் கருவிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இதைத் தரவிறக்கம் செய்து, தயாரித்து, செல்போனில் பதிவுசெய்து மாணவர்களுக்குக் காட்ட, செயல்படுத்த செல்போன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இதை மறுக்கலாமா? இன்னொரு கணித ஆசிரியர் கணிதச் சூத்திரத்தை மாணவர்களுக்குக் காட்ட, அதன் செயல்பாட்டினைப் பவர்பாயின்ட் ப்ரசென்டேஷனில் அமைந்த வீடியோவை (ஆபிஸ் 2013)க் காட்டியுள்ளார். இப்படி பல கணித வகைகளைக் காட்டிவருகிறார்.
இதற்காக அவர் பயன்படுத்தியது செல்போன். மற்றொரு அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் மிதக்கும் காந்தம் பற்றி நடத்துவதற்குமுன், அதன் ஆங்கில வீடியோவை டவுன்லோட் செய்து, அதனைத் தமிழ்ப்படுத்தி, அதனைத் தன் செல்போனில் ஏற்றி, மாணவர்களுக்குக் காட்டினார். தற்போது அவர் பலவித அறிவியல் சோதனைகளைப் பாடமாக நடத்துவதற்குப் பதிலாக, சொற்களால் விளக்குவதற்குப் பதிலாக வீடியோவைச் செல்போன் வழியாகக் காட்டி வருகிறார். அதற்குப் பிறகு அவர் தெளிவாக மாணவர்களுக்குப் புரிய வைக்கிறார். எனவே அவர் இனிமேல் செல்போன் பயன்படுத்துவதைத் தடைசெய்யலாமா? இன்னொரு ஆசிரியர் சற்று வித்தியாசமானர். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர். அவரிடம் அக்பர் பற்றிய பாடம் நடத்துங்கள் என்றால், அதற்கான ப்லொ சார்ட்டை தயாரித்து, வீடியோவாக்கித் தந்துவிடுவார். தன் ஆசிரிய நண்பர்களுக்கு ஷேர் செய்வார். அவருடைய பாட அறையில், ஹிஸ்டிரி சேனலில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட, தாஜ்மகால் பற்றிய செய்தியைக் காட்டினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக