லேபிள்கள்

2.6.15

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக 13 முதன்மைக் கல்வி அதிகாரிகள் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 13 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 


கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும்,

 விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 

திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி  விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 

கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார்  திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 

கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

தஞ்சாவூர்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்    (கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அனைவருக்கும் கல்வித்திட்டம் பொறுப்பு), 

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ராமசாமி கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 நாகப்பட்டிணம்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  சாந்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 

சேலம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்  உஷா காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் 

நியமிக்கப்படுகிறார்கள் என அதில் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக