சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்ககால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த மே 6-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நடைபெறவுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 5 என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விண்ணப்பங்கள் விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்துப் படிப்பு மையங்களிலும் ரூ.800 கட்டணம் (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400) செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் ஆன்-லைனில்விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதற்கான தொகையை வரைவோலையாக இணைத்தும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக