சென்னை ஐகோர்ட்டில், வி.எம்.உமா சந்தர் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், தமிழக பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்துக்கான வகுப்புக்களை போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. எனவே
, வாரத்துக்கு 7 வகுப்புகள் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கல்வித்துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 'மனுதாரரின் கோரிக்கையை கல்வித்துறை நிபுணர்கள் ஆய்வு செய்து, தகுந்த உத்தரவினை ஒரு மாதத்துக்குள் பிறப்பிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக