லேபிள்கள்

5.6.15

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 22-ந் தேதி தரவரிசைப் பட்டியல் கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 22-ந் தேதி தரவரிசைப் பட்டியல்வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் தனியார் பயிற்சி பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு என இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு 3,300-க்கும் மேற் பட்டவர்கள் விண்ணப்பித் துள்ளனர். 

அவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ந் தேதி வெளியிடப்பட்டு கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெறும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். 

பிரிவு வாரியாக கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:- 


ஜூலை 1-ந் தேதி (புதன்கிழமை) - சிறப்புப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்தி, முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள். 


ஜூலை 2-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கில மொழி மற்றும் சிறுபான்மை மொழியில் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகள். 


ஜூலை 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - தொழிற்கல்வி பிரிவு மாணவ-மாணவிகள். 


ஜூலை 4 மற்றும் 6-ந் தேதி (சனி, திங்கள்கிழமை) - கலைப்பிரிவு மாணவ-மாணவிகள். 


ஜூலை 7 முதல் 10-ந் தேதி வரை - அறிவியல் பிரிவு மாணவ-மாணவிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக