பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியப் பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 1) கடைசி நாளாகும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,
கணிதம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்நகல்களை scan.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து மே 28 முதல்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தவர்கள் இதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தின் மூலம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க கடைசி நாள் திங்கள்கிழமை (ஜூன் 1) ஆகும். இதற்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு தொடர்பாக தேர்வர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
8012594109, 8012594119, 8012594124, 8012594126 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக