தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்கள் குறித்த விவரங்களை
இணையதளத்தில் 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மாற்றத்துக்கான இந்தியா என்ற அமைப்பின் இயக்குனராக இருப்பவர் பாடம் ஏ.நாராயணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
கட்டணத்தொகை பாக்கி
தமிழ்நாடு மழலையர், தொடக்கப்பள்ளி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் கூட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 23–ந்தேதி சென்னையில் நடந்தது.இந்த கூட்டத்தில், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஏழை மாணவர்களை சேர்த்ததற்கு தமிழக அரசு ரூ.150 கோடி கல்வி கட்டணம் வழங்கவேண்டும். அந்த கட்டணத்தை வழங்கா விட்டால், வருகிற கல்வியாண்டில், 25சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் ஏழை மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்று தீர்மானம் இயற்றியுள்ளது.இந்த தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் எல்லாம் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளர் பி.அழகேசன் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:–பணம் வழங்கவில்லைகட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில், எல்.கே.ஜி., 1 மற்றும் 6–ம் வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளில் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அந்த பள்ளிகளுக்கு ரூ.25.13 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு, சர்வ சிஷா அபியான் திட்டத்தின் தமிழக திட்ட இயக்குனர் கடந்த 2013–ம் ஆண்டு கடிதம் எழுதினார்.தனியார் பள்ளிகளுக்கு வழங்கவேண்டிய ரூ.25.13 கோடியில், வெறும் ரூ.14 லட்சத்துக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாதிக்கக்கூடாது
எனவே, ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதால், கடந்த 2 கல்வியாண்டில் நடந்த மாணவர்கள் சேர்க்கைக்காக தனியார் பள்ளிக்கு வழங்கவேண்டிய ரூ.97.05 கோடியை தமிழக அரசு வழங்க முன்வந்துள்ளது.இதையடுத்து கடந்த மே மாதம் அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கைக்கு உரிய கல்வி கட்டண தொகை 2014–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி முதல்தான் கணக்கிட முடியும். அதுவும் 1–ம் வகுப்பில் சேர்ந்து 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம்பொருந்தும் என்றும் கூறியுள்ளது.
எதிர்காலம் கேள்விக்குறி
இதனால், கடந்த 2013–14–ம் கல்வியாண்டிற்காக தமிழக அரசு வழங்கியுள்ள ரூ.25.13 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காது. தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இந்த தொகையை தமிழக அரசுதான் ஏற்க வேண்டியநிலை உள்ளது.இதுதவிர 2014–15 கல்வியாண்டிற்கு தனியார் பள்ளிகளுக்கு வழங்கவேண்டிய ரூ.71.57 கோடி தொகையில், மத்திய அரசு வெறும் ரூ.14 லட்சம் மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவுகளின் இருந்து மத்திய அரசு மாறாமல் உள்ளது. இதனால் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் கடந்த2 கல்வியாண்டுகளில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 1 லட்சத்து 36 ஆயிரத்து593 குழந்தைகளின் எதிர்காலத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்குகிறது.
விளம்பரம் செய்யவேண்டும்
இதுதவிர இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி,அதனடிப்படையில் கடந்த மே 5–ந்தேதி அரசாணை பிறப்பித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.இதனடிப்படையில், கடந்த மே 15 மற்றும் 16–ந்தேதிகளில், 19 இணை கல்வி இயக்குனர்கள் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளை சென்று, அங்கு 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களை கொண்டு நிரப்பும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதை ஆய்வுகளை செய்துள்ளனர்.
புகார் வரவில்லை
மேலும், ஒவ்வொரு தனியார் பள்ளிகளும், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ்25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் எத்தனை இடங்கள் உள்ளது என்ற விவரங்களை விளம்பரபலகையில் குறிப்பிட்டு பள்ளிக்கு முன்பு, பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாகவைக்கவேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களின் விவரங்களை மாவட்டகல்வி அதிகாரி, ஒன்றிய கல்வி அதிகாரி அலுவலக வாசலில் வைக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர் தவறாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதுவரை, தனியார் பள்ளிகள்ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களை இடம் வழங்கவில்லை என்று எந்தஒரு புகாரும் அரசுக்கு வரவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடவேண்டும்
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்கள் குறித்து எல்லாரும் தெரிந்துகொள்ளும் விதமாக விளம்பரப்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று இந்த ஐகோர்ட்டுக்கு அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் எத்தனை இடங்கள் உள்ளது என்ற விவரங்களை 3 நாட்களுக்குள் பள்ளிக்கல்வி துறை தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும், இந்த மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
ஒருவேளை,இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்கள் தனியார் பள்ளிகளில் நிரப்பப்படவில்லைஎன்றால், அந்த இடங்களை நவம்பர் மாதம் வரை காலியாக வைத்திருக்கவேண்டும் என்று இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் கூறுகிறது.விவர அறிக்கைஇதன்மூலம் எத்தனை இடங்களில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு அந்த இடங்களை நிரப்புவதற்கு தேவையான கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்கலாம். எனவே, 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை 4 வாரத்துக்குள் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் தாக்கல் செய்யவேண்டும். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பதில் மனுவுக்கு மத்திய அரசு 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூலை 6–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக