லேபிள்கள்

1.6.15

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று திறப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை( ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசுத் தொடக்கப் பள்ளிகள்,
நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.


கடந்த சில நாள்களாக கோடை வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திட்டமிட்டவாறு ஜூன் 1-ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
மாணவர்களுக்குப் பள்ளித் திறக்கும் நாளான திங்கள்கிழமையே இலவசப் புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.


ஏற்கெனவே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல்9-ஆம் வகுப்பு வரை படிக்கும்50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி, முதல் பருவத்துக்கான புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.அதேபோல, 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு செட் இலவச சீருடையும் வழங்கப்படுகிறது. 

1 முதல்10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 60 லட்சம் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.மாணவர்களுக்கு இந்தப் பொருள்கள் எந்தவிதப் பிரச்னையும் இன்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக