பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 4 முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுத்துறையின் இணை இயக்குநர் (பணியாளர்) கே.ஸ்ரீதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29-ந் தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில்,வியாழக்கிழமை (ஜூன் 4) முதல் மாணவர்கள் தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த இணையதளத்துக்குள் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துவிடலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக