லேபிள்கள்

16.12.15

கடன் தொகையை திரும்பத் தராததால் தலைமையாசிரியை சம்பளத்தில் பிடிக்க உத்தரவு

பழனியில் விவசாயியிடம் கடன் வாங்கிய பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்த பள்ளித் தலைமையாசிரியைக்கு, அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க, திங்கள்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பழனியை அடுத்த எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (63). விவசாயியான இவரிடமிருந்து, பழனியை அடுத்த பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணிபுரிந்து வரும் கலைச்செல்வி என்பவர் ரூ. 4 லட்சத்து 10 ஆயிரம் கடனாகப் பெற்றுள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்து பல மாதங்களாகியும் கலைச்செல்வி பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். எனவே, கிருஷ்ணசாமி பழனி சார்பு-நீதிமன்றத்தில் கலைச்செல்வி மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், தற்போதைய தேதி வரை அசல் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 6,89,000 கலைச்செல்வி செலுத்த வேண்டும் என்றும், இத்தொகையை அவரது சம்பளத்தில் மாதந்தோறும் ரூ. 23,000 வீதம் பிடித்தம் செய்து, நீதிமன்றத்தில் கட்ட வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக