பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விடுமுறை எப்போது விடப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 15 நாள்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் பாதிக்கப்படாத மாவட்டங்களில் குறைந்த நாள்கள் மட்டுமே
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வு அல்லது இரண்டாம் பருவத் தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு வரும் 16-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும், அதன்பின்னர், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசின் அறிவிப்பு, அரையாண்டு மற்றும் பருவத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைப்பதாக உள்ளது. ஆனால், இரண்டாம் பருவத் தேர்வுக்கான விடுமுறை 9 நாள்கள் திட்டமிட்டபடி டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், தேர்வுக்குப் பிறகுதான் விடுமுறை என்றால், ஜனவரி முதல் வாரத்துக்கு பின்னர் பொங்கல் விடுமுறை நாள்களுடன் சேர்த்து கூடுதலாக விடப்படுமா என்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக