லேபிள்கள்

19.12.15

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 வெள்ள பாதிப்பு காரணமாக சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி வழக்குரைஞர் பி.ஆர்.பாலசுப்பிரமணியன் மனுதாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: 

 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுதவிர, மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிகள் கூடுதல் நேரம் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இருப்பினும், மாணவர்களுக்கு சிரமங்கள் உள்ளன. ஆனால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால், திட்டமிட்டபடி கல்லூரிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் விளைவுகளை ஏற்படுத்தும்.
 எனவே, தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
 பின்னர் வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக