லேபிள்கள்

18.12.15

கிறிஸ்துமஸ் விடுமுறை பள்ளிகளுக்கு உண்டா

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட, மழை விடுமுறையை கணக்கில் கொண்டு, அரையாண்டு தேர்வு, ஜனவரிக்கு மாற்றப்பட்டது. அதன் பின், தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.இந்நிலையில்,நான்கு மாவட்டங்களில், 14ம் தேதி முதல், வகுப்புகள் துவங்கியுள்ளன. எனவே, கிறிஸ்துமஸ், மீலாடி நபி மற்றும் புத்தாண்டு விடுமுறை உண்டா
என, பள்ளிகள் எதிர்பார்ப்பில் உள்ளன. 
ஏற்கனவே, மழை விடுமுறை அறிவிப்பில், முன்கூட்டியே திட்டமிடாமல், தினமும் விடுமுறை அறிவித்த கல்வித்துறை, தற்போது, திட்டமிடப்பட்ட பண்டிகை கால விடுமுறை அறிவிப்பிலும், மெத்தனமாக உள்ளது.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: வெள்ளம் பாதித்த மாவட்டங்களை தவிர மற்ற, 28 மாவட்டங்களில், திட்டமிட்ட படி பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. எனவே, கல்வி ஆண்டின் படி, 22ம் தேதி செவ்வாய் கிழமையுடன், 2ம் பருவ மற்றும் அரையாண்டு வேலை நாட்கள் முடிகின்றன. 23 முதல் ஜனவரி, 1 வரை, மீலாடி நபி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என, கல்வி ஆண்டுக்கான காலண்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பை அறிவித்த கல்வித்துறை, விடுமுறை குறித்து எந்த முடிவும் அறிவிக்காமல் உள்ளதால், குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக