விருதுநகர் உட்பட ஐந்து மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் இல்லாததால், மாணவர்களை வெளி மாவட்டங்களில் தங்கி படிக்க வைக்க பெற்றோர் தயங்குகின்றனர். இதனால் மாணவர்களின் திறமைகள் வீணடிக்கப்படுகிறது.
தமிழகஅரசின் விளையாட்டு துறை சார்பில்
, நடத்தப்படும் விளையாட்டு விடுதிகளில் ஏழு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு வழங்கப்படும் பயிற்சியால் விளையாட்டு வீரர்களாகவும் திகழ்கின்றனர். இதில் ஒரு மாணவருக்கு தினமும் உணவுக்காக 250 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டு
வருகிறது.
பெற்றோர் தயக்கம்: ஆனால் இவ்விளையாட்டு விடுதிகள் தமிழகத்தில் பெரும்பான்மை மாவட்டங்களில் இருந்தாலும் சேலம், கரூர், திருப்பூர், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் இதுவரை அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் இம் மாவட்ட மாணவர்கள் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். ஆனால் வெளி மாவட்ட விடுதிகளில் மாணவர்களை தங்க வைத்து படிக்க வைக்க பெற்றோர் தயங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் , திறமை இருந்தும் வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
விளையாட்டு துறை அதிகாரி கூறுகையில்,“ தற்போது 'டிவி' வருகையால் மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்தாலும், கிராம மாணவர்கள் இன்றும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு தங்கி படிக்கும் வசதியோடு விளையாட்டு பயிற்சியும் கொடுத்தால், விளையாட்டில் சிறந்து விளங்குவதோடு, எதிர் காலத்தில் மேற்படிப்பு, அரசு வேலை போன்றவைகளும் எளிதில் கிடைக்கும். ஆனால் அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் அதற்கு பெற்றோர் மறுக்கின்றனர். இதனால் பல மாணவர்களது விளையாட்டு திறமைகள் வீணாகி வருகின்றன” என்றார்.எனவே அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகளை ஏற்படுத்த தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக