லேபிள்கள்

15.12.15

வி.ஏ.ஓ., தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு

கிராம நிர்வாக அலுவலர் எனப்படும், வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:வி.ஏ.ஓ., பதவிக்கு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப, நவ., 11ல், அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த பதவியில் சேர, இணையவழி விண்ணப்பங்களை பதிவு செய்ய, டிச., 14 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெருமழை மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழலால், விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், டிச., 31க்கும், விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள், ஜன., 2ம் தேதிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக