லேபிள்கள்

3.7.16

பி.இ., தமிழ் வழியில் சேர்க்கை அதிகம் : தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்

காரைக்குடி: “கிராமப்புற மாணவர்கள் பி.இ., தமிழ் வழியில் சேருவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது,” என
காரைக்குடியில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையை 
பார்வையிட்ட தொழில் நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி தெரிவித்தார். 


காரைக்குடி அழகப்ப செட்டி யார் இன்ஜி., கல்லுாரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. நேற்று மெக்கானிக்கல் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது.
கவுன்சிலிங்கை பார்வையிட்டு, விண்ணப்பித்தவர்களுக்கு கல்லுாரியில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை தொழில் நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி அளித்தார். அவர் கூறியதாவது:


பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்ததற்கு காரணம், பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக பணிக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் பகுதி நேரமாக பி.இ., படிப்பை தொடர்கின்றனர். அதனால், பகுதி நேர பி.இ., படிப்பை கூடுதல் 
கல்லுாரிகளில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தமிழ் வழியில் பயின்ற 
மாணவர்களின் வசதிக்காக, பி.இ., தமிழ்வழி அறிமுகப்படுத் தப்பட்டது. கடந்த ஆண்டை 
காட்டிலும் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 


ஆங்கில வழி கல்வியை தேர்வு செய்பவர்களுக்கு, ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி அளிப்பதற்
குரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு கல்லுாரியும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். இன்ஜி., கல்லுாரி அதிகரித்தபோதும், மாணவர்கள் சிறந்த கல்லுாரியை தேர்வு செய்கின்றனர்.
இன்ஜி., கல்லுாரிகளில் செயல்படுத்தப்பட்டு வரும், தொழில்நுட்ப கல்வி தர மேம்பாட்டு திட்டம் கடந்த 2003-ல் ஆரம்பிக்கப்பட்டு 2009ல் முடிவடைந்தது. அதை தொடர்ந்து அடுத்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 


இந்தியாவிலேயே இத்திட்டம் சிறப்பாக செயல்படுவது தமிழகத்தில் தான். அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ரூ.17.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட திட்டம் வருகிற அக்டோபரில் தொடங்கப்பட உள்ளது, என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக