லேபிள்கள்

8.7.16

மருத்துவ காப்பீடு திட்டம் விரிவுபடுத்த ஆசிரியர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் பெற்றோர்களையும் இணைக்கும் வகையில் அரசு திட்டத்தை விரிவுபடுத்தி மேலும், சில குறைபாடுகளை களைந்து புதிய அறிவிப்பை வெளியிடவேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை, 4 ஆண்டுகள் நீட்டித்து இத்திட்டம், ஜூலை, 1 முதல், 2020 ஜூன், 30 வரை தொடரும் 
என அரசு உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை நிதி, 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீட்டு தொகை, 4 லட்சம் ரூபாயாகவே உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து, காப்பீட்டு தொகையை பெற முடியாமல் பல்வேறு சிரமம் எழுந்ததாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதனால், அரசே முழுபொறுப்பையும் ஏற்கவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின.
இருப்பினும், அரசு தற்போது பழைய வழக்கத்தின் படியே கூடுதலாக சில பலன்களுடன், காப்பீடு திட்டத்தை நீட்டி அறிவித்துள்ளது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் எந்ததெந்த நோய்களுக்கு எவ்வளவு காப்பீடு தொகை என்பதை தெளிவுபடுத்தி, அனைத்து விதமான நோய்கள், விபத்துகளை உள்ளடக்கியும் விதிமுறைகளை வெளியிடவேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் மனைவி, மகன், மகள் மட்டுமின்றி பெற்றோரையும் பெயர்களையும் இணைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், ''மருத்து காப்பீடு தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும், பெரும்பாலான நோய்களுக்கும், விபத்துக்களுக்கும் காப்பீடு பயன்படும் வகையில் அமையவேண்டும். முக்கியமாக, காப்பீட்டு திட்டத்தில் மனைவி, மகன்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரை இணைக்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தி அரசு அறிவிக்கவேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக