நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தாததால் இடம் மாறி செல்ல முடியாமலும், பதவி உயர்வு மற்றும் போதிய ஆசிரியர் இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. இதனால், துவக்க மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பிரச்னையின்றி கலந்தாய்வில் பங்கேற்று இடமாறுதல் பெற்று வந்தனர்.
நடப்பு கல்வி ஆண்டின் துவக்கத்தில், தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றதால் ஆசிரியர் கலந்தாய்வை இதுவரை நடக்கவில்லை.
இதனால், நடப்பு கல்வி ஆண்டில் இடம் மாறி செல்லலாம் என நினைத்த ஆசிரியர்கள் அவ்வாறு செல்ல முடியாமல் உள்ளனர். மேலும் பதவி உயர்வும் இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை என்பதேயாகும். தமிழக அரசு விரைந்து அரசாணை மற்றும் தெளிவுரை வெளியிட்டு, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக