லேபிள்கள்

3.7.16

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, தகுதியானவர்கள், ஜூலை, 31க்குள் 
விண்ணப்பிக்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி வழிக் கல்விக்கு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. கணினி வழிக் கல்வியில் புதுமையை புகுத்துவோரை ஊக்குவிக்க, மத்திய அரசு விருது வழங்குகிறது. 'கடந்த கல்வி ஆண்டுக்கான, சிறந்த தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, ஜூலை, 31க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. மாநில அரசின் பாடத்திட்ட பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளி, இந்தோ - திபெத்தியன் பள்ளி உட்பட, மத்திய அரசின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த தகவல்களை,http://cbseacademic.in இணையதளத்தில் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக