லேபிள்கள்

21.6.17

தமிழகத்தில் அங்கீகாரத்தை புதுப்பிக்காத 11 கல்லூரிகள் மூடல்... அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெறும் கல்லூரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால்2017-2018ம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரத்தை என்ஜீனியரிங் கல்லூரிகள் உட்பட 11 கல்லூரிகள் புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்கவில்லை. எனவே இந்த 11 கல்லூரிகளும் மூடப்படுகின்றன.

இக்கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்காது. மற்ற ஆண்டு மாணவர்கள் வழக்கம்போல இந்த கல்லூரிகளில் பாடம் படித்து கொள்ளலாம். இந்த கல்லூரிகள் இந்த ஆண்டு திறந்திருக்கும் என உயர்கல்வி முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.


மூடப்படும் கல்லூரிகளின் விபரங்கள்
சென்னையில் உள்ள மேக்னா என்ஜீனியரிங் கல்லூரி,
ஸ்ரீ ரெங்கம்மாள் ஆர்கிடெக்ட்கல்லூரி,
கோவையில் உள்ள விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜீனியரிங் அன்ட் டெக்னாலஜி (மகளிர்)
சசி வணிகம் சார் கல்லூரி,
மகாராஜா பிரித்வி என்ஜீனியரிங் கல்லூரி,
திருச்சியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர் மேஷன் டெக்னாலஜி,
ஆர்.வி.எஸ் - கே.வி.கே.
இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட் ஸ்டெடி,
சுவாமி விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மெனட்,
மதுரையில் உள்ள மைக்கேல் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட்,
சி.ஆர். என்ஜீனியரிங் கல்லூரி,
ஜோ சுரேஷ் என்ஜீனியரிங் கல்லூரி
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 11 கல்லூரிகளும் 2017-18ம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரத்தை பெறாததால் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்கை நடைபெறவில்லை. 2ம் ஆண்டு மாணவர்கள் முதல் இறுதி ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து கல்விகற்கலாம். மேலும் இந்த வருடம் இந்தக் கல்லூரிகள் இயங்கும் என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக