'பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில், சுற்றுலா துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் நடராஜன் கூறியதாவது:
* கன்னியாகுமரி, தஞ்சை, திருச்சி, திருச்செந்துார், ஏற்காடு, ஒகேனக்கல், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும், ஓட்டல் தமிழ்நாடு வளாகங்களில், 'வை - பை' சேவை, 25 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
* சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஏதேனும், ஒரு சுற்றுலா தலத்திற்கு, ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்துக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 64 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
* இந்த ஆண்டு, உலக சுற்றுலா தின விழாவை, மாநில அளவில், திருச்சியில் கொண்டாட, 25 லட்சம் ரூபாய் நிதி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக