பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஒரு பாடத்துக்கு, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. புதிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, 600 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடக்கும்.
ஆனால், தற்போது பள்ளிகளில் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கான, வினா பட்டியல் அடங்கிய புளூ பிரின்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனால், 100 மதிப்பெண்களுக்கு தயாராவதா; 200 மதிப்பெண்களுக்கு தயாராவதா; வினாக்களின் வகை என்ன என, எந்த விபரமும் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக