லேபிள்கள்

23.6.17

இன்ஜி., கவுன்சிலிங் 'டாப்பர்ஸ்'பட்டியல் வெளியீடு

அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 'டாப்பர்ஸ்' பட்டிய லில், தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை. கேரளாவில் உள்ள பாடத்திட்டத்தில் படித்த, மாணவி, 1,200க்கு, 1,200 மதிப்பெண் பெற்று, அந்த மாநிலத்தில் முதல் இடம் 
பெற்றுள்ளார். இவரும், தமிழக இன்ஜி., கவுன்சிலிங் தரவரிசையில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்று, டாப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

முதல் 12 இடங்கள் பிடித்தோர்

பெயர் பள்ளி மாவட்டம் மதிப்பெண் பாடப்பிரிவு
ஸ்ரீராம் பெஸ்ட் ஸ்கூல், தஞ்சாவூர் தஞ்சாவூர் 1,185 கம்யூ., சயின்ஸ்
ஹரி விஷ்ணு விகாஷ் வித்யாலயா, திருப்பூர் திருப்பூர் 1,191 கம்யூ., சயின்ஸ்
சாய்ராம் சியோன் மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை சென்னை 1,184 கம்யூ., சயின்ஸ்
கிருத்திகா கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல் சேலம் 1,191 உயிரியல்
யுவனேஷ் வேலம்மாள் மெட்ரிக், பொன்னேரி திருவள்ளூர் 1,189 உயிரியல்
பிரீத்தி வெங்கட லட்சுமி மெட்ரிக், சிங்காநல்லுார் கோவை 1,193 உயிரியல்
கீர்த்தனா ரவி பி.எஸ்.எஸ்.குருகுலம், பாலக்காடு கோவை 1,200 உயிரியல்
சதீஷ்வர் கிரீன் பார்க் மெட்ரிக், நாமக்கல் சேலம் 1,186 உயிரியல்
ஷோபிலா கே.ஆர்.பி.மெட்ரிக், சங்கரி மேற்கு சேலம் 1,190 உயிரியல்
சவுமியா ஜெயம் வித்யாலயா, அரூர், தர்மபுரி தர்மபுரி 1,187 உயிரியல்
முகமது அர்ஷத் எஸ்.ஆர்.வி., பள்ளி, திருச்சி திருச்சி 1,184 உயிரியல்
ஷோபனா தேவி அணுசக்தி மேல்நிலைப்பள்ளி, கல்பாக்கம் காஞ்சிபுரம் 1,172 உயிரியல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக