லேபிள்கள்

18.6.17

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் - அமைச்சர் செங்கோட்டையன்.

இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தியானப் பயிற்சி விழாவில், செங்கோட்டையன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர், தற்காலிக ஆசிரியர்களுக்கு, மற்ற ஆசிரியர்களைப் போல, மாதம் தோறும் ஊதியம் வழங்கப்படும் என்றார். அங்கன்வாடிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக