'தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என தவறான அறிவிப்பை, தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதால், உடனடியாக அட்டவணை மாற்றப்பட்டு தேர்வர்களின் குழப்பத்தை டி.ஆர்.பி., தீர்த்து வைத்தது.
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்கள் 1,058 உள்ளன. இதில் நியமனம் செய்ய தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வு ஆக., 13ல் நடக்க உள்ளது. மேலும் ஜூலை 7க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. மொத்தமுள்ள பணியிடங்களில் 20 சதவீதம் தமிழ் வழி முதுகலை படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான இடஒதுக்கீடு அட்டவணை இணைய தளத்தில் டி.ஆர்.பி., வெளியிட்டது. சுட்டிக் காட்டிய தினமலர் அதில், 'தமிழ் வழியில் எம்.ஏ., (முதுகலை) ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என, தவறாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தவறு குறித்து ஜூன் 18ல் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து உடனடியாக அந்த தகவலை அட்டவணையிலிருந்து நேற்று
டி.ஆர்.பி., நிர்வாகம் நீக்கி உள்ளது. இதனால் தேர்வர்களின் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக