மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், கூட்டல் பிழைகள் அதிகரித்துள்ளதால், மதிப்பெண் குறைந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இரு வாரத்திற்கு முன் வெளியாகின. தேர்வில் மறுகூட்டல் தேவைப்படுவோர், ஆன்லைனில் விண்ணப்பித்து, விடைத்தாள் நகல் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்றனர். பல மாணவர்களுக்கு விடைத்தாள்களில், அதிக கூட்டல் பிழைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மறுகூட்டலில், சில மாணவர்களுக்கு, ஏற்கனவே எடுத்த மதிப்பெண்களை விட, 100 சதவீதத்திற்கு மேல், கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தன. மேலும், பல மாணவர்கள் தேர்ச்சி பெறவும், தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் கணிசமாக அதிகரிக்கவும், வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இது, மாணவர்கள், பெற்றோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து, பெற்றோர் கூறுகையில், 'பிளஸ் 2 மதிப்பெண் படியே, மாணவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
மதிப்பெண்ணை கூட்டுவதில், சி.பி.எஸ்.இ., தரப்பில் பிழைகள் ஏற்படுவது, மாணவர்களை நசுக்கும் செயல். இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், சி.பி.எஸ்.இ., மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக