லேபிள்கள்

22.6.17

பி.எட்., விண்ணப்பம் வினியோகம்

தமிழகம் முழுவதும், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,777 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான, அரசின் ஒற்றைச்சாளர கவுன்சிலிங், சென்னை, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம்
நடத்தப்படுகிறது. இதற்காக, பேராசிரியர் கலை செல்வனை, உறுப்பினர் செயலராக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. !TNGTF!இந்த கமிட்டி சார்பில், பி.எட்., விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது; வரும், 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகளிலும், திண்டுக்கல் லட்சுமி கல்லுாரி; சேலம் சாரதா கல்லுாரி; மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லுாரி; துாத்துக்குடி வி.ஓ.சி., கல்லுாரி; பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் மற்றும் திருவட்டாறு எஸ்.வி.கே.எஸ்.டி., கல்லுாரியில் விண்ணப்பங்களை பெறலாம். நேற்று மட்டும், ௧,௮௮௮ பேர் விண்ணப்பங்கள் பெற்றனர். - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக