மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. முதல், 10 இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒருவரும் இடம் பெறவில்லை. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்,
ஜூலை, 1ல் துவங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டில், 3,328; நிர்வாக ஒதுக்கீட்டில், 516 இடங்கள் உள்ளன. பல் மருத்துவமான, பி.டி.எஸ்.,சில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,757 இடங்களுக்கு, 47 ஆயிரத்து, 347 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான தர வரிசை பட்டியலை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதை, துறை செயலர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அரசு மற்றும் நிர்வாக இடங்களுக்கு, தனித்தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.அரசு இடங்களுக்கு, 25 ஆயிரத்து, 417 பேர், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 18 ஆயிரத்து, 915 என, 44 ஆயிரத்து, 332 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், திருநங்கை ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.சென்னை மாணவிமுதலிடம்'நீட்' தேர்வில், 676 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், 12வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்த, சென்னையை சேர்ந்த, கீர்த்தனா, தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றார். முதல், 10 இடங்களில், மாநில பாடத்திட்ட மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை.பின், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:கடந்த ஆண்டில் இருந்த இடங்களே, அரசு மருத்துவ கல்லுாரிகளில் இந்தாண்டும் உள்ளன. மூன்று தனியார் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியளிக்கவில்லை. போலி இருப்பிட சான்றிதழ், இரட்டை இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதை தடுக்க, விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.ஜூலை 1ல் கவுன்சிலிங்மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1ல் துவங்குகிறது. முதல் நாளில், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும். விளையாட்டு பிரிவினருக்கு, ஏழு எம்.பி.பி.எஸ்., - ஒரு பி.டி.எஸ்., இடங்கள்; மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 சதவீத இடங்கள்; முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, 10 எம்.பி.பி.எஸ்., - ஒரு பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், ஜூலை, 2ல் துவங்கி, 10ம் தேதி வரை நடைபெறும். அகில இந்திய கவுன்சிலிங்கில் நிரப்பப்படாத இடங்கள், தமிழகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின், அந்த இடங்களையும் சேர்த்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.முதல் 10 இடம் யாருக்கு? பெயர் நீட் மதிப்பெண்கே.கீர்த்தனா, தாம்பரம் 676ஆர்.ராஜ் சந்துார் அபிஷேக், தர்மபுரி 656ஆர்.பிரவீன், சென்னை 650முகமது ஷோயிப் ஹாசன், சென்னை 644டி.வி.ராகவேந்திரன், பென்னேரி 626எஸ்.அரவிந்த், திருப்பூர் 625என்.இ.அரி நரேந்திரன், திருச்சி 625சி.ஆர்., ஆர்த்தி சக்தி பாலா, நெல்லை 623யெந்துாரி ருத்விக், சென்னை 621யு.எம்.ரவி பாரதி, ஈரோடு 617
சென்னை முதலிடம்மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னையை சேர்ந்த 2,939 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் 1,390; திருவள்ளூர் 1,344 என இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 148 பேர் தகுதி பெற்றுள்ளனர்.மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டுபிற மாநிலங்களில் படித்தவர்களும், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் கேரளாவில் 52; ஆந்திராவில் 18; கர்நாடகாவில், 52; பிற மாநிலங்களில் 34 பேர் தர வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.
12 பேருக்கே வாய்ப்பு?தர வரிசை பட்டியலில் 3,000 இடங்கள் வரை பெற்றவர்கள் மட்டுமே அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மருத்துவ இடங்களை பெற வாய்ப்புள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 12 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தான், அரசு கல்லுாரிகளில் இடங்கள் கிடைக்கும். மற்ற இடங்கள் பிற பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைக்கும் சூழல் உள்ளது.அதேநேரம், தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் அதிகம் இடம் பெற வாய்ப்புஉள்ளதாக மாணவர் சேர்க்கை கவுன்சில் அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக