தமிழகத்தில் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், ஏராளமான குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.கல்வித்துறையில் டி.இ.ஓ., நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இருக்கை கண்காணிப்பாளர். உதவியாளர், இளநிலை உதவியாளர் உட்பட 7000க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர் உள்ளனர். இவர்களுக்கு காலி பணியிடங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும்.இதற்காக ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் பதவி உயர்வு, பணி மூப்பு பட்டியல் தயாரித்து வெளியிடப்படும்.
இந்தாண்டுக்குரிய பட்டியல் 15.3.2018 வெளியிடப்பட்டது. இதில் பல குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து கல்வி அலுவலர்கள் கூறியதாவது:பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் 2017ல் இடம் பெற்றிருந்த பலரின் பெயர் 2018 பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும் முன்னுரிமை பட்டியலில் பெயர் இடம் பெற தகுதியாக 2017ல் துறைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தாண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் தகுதியாக எடுக்கப்பட்டது.பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலின்போது 'விருப்பம் இல்லை,' என எழுதி கொடுத்தவர் பெயரை மூன்று ஆண்டுகள் வரை பட்டியலில் சேர்க்க கூடாது.
ஆனால் ஒன்று, இரண்டு ஆண்டுகளே ஆன பலரின் பெயர் பணிமூப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை நீக்கி பதவி உயர்வு வழங்க வேண்டும், என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக