லேபிள்கள்

30.6.18

SSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்கவில்லை -கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிப்பு!

நடப்பு கல்வியாண்டு முதல்,அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தையும் இணைத்து செயல்படுத்தும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் வழிகாட்டுதல் படி, எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் புதிய மாற்றங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்குவது, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது போன்ற செயல்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.நடப்பு கல்வியாண்டு துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்தும், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் உள்ளவர்களுக்கு நடப்பாண்டுக்கான பணிகள் என்னென்ன, பள்ளிகளில் ஆய்வுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
 மத்திய அரசு, மூன்று இயக்ககங்களும் இணைக்கப்பட்டுள்ளதை மட்டுமே உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாததால், தற்போது, ஆசிரியர் பயிற்றுனர்கள் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வழக்கமாக, கல்வியாண்டின் துவக்கத்தில், பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். இப்போது, எதன்படி ஆய்வு நடத்துவதென்பது தெளிவான வழிகாட்டுதல் இல்லை.இதனால், மாதம்தோறும் நடத்தப்படும் குறுவளமையப்பயிற்சிகளும் நடத்தப்படவில்லை. அறிவிப்புகளை அவசரமாக வெளியிட்டு அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தாமதப்படுத்துவதால், கல்வித்துறைச் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக