லேபிள்கள்

28.6.18

போட்டி தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

போட்டி தேர்வுகளின் தற்போதைய நிலவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., என்ற, 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இணையதளத்தில் 
வெளியிட்டுள்ளது.



















இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன்
 வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்பட்ட போட்டி 
தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை 
எடுத்து வருகிறது. புது முயற்சியாக, 2016 மற்றும், 2017ல் நடத்தப்பட்ட 
தேர்வுகளில், நிலுவையிலுள்ள போட்டி தேர்வுகளின் முடிவுகளை
 வெளியிடும் தோராய கால அட்டவணை, ஜூன், 4ல் வெளியிடப்பட்டது. 
இந்நிலையில், தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை குறித்த 
விபரங்கள், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் 
வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக