தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், 250 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளன. 'அந்த வாகனங்களை இயங்கினால், பறிமுதல் செய்யப்படும்' என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 30 ஆயிரத்து, 457 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களை, 2018 - 19 கல்வி ஆண்டில் பயன்படுத்த, மே, 31க்குள் தகுதி சான்றிதழ் பெற, பள்ளி, கல்லுாரிகளுக்கு போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியது.வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், தகுதி சான்றிதழ் வழங்கும் பணிகள், ஏப்., 13ல் துவங்கி, ஜூன், 20 வரை நடந்தது. 81 வட்டார போக்குவரத்து அலுவலர்கள், 40 பகுதி நேர அலுவலர்கள், வாகனங்களை ஆய்வு செய்து, போக்குவரத்து கமிஷனருக்கு, அறிக்கை அனுப்பினர்.இதில், 29 ஆயிரத்து, 855 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 250 வாகனங்கள், தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளன. ஆய்வுக்கு வராத, 352 வாகனங்களின் அனுமதியை, பள்ளி நிர்வாகங்கள், திரும்ப ஒப்படைத்துள்ளன.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ள வாகனங்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்படுவதோ டு, பள்ளி நிர்வாகம் மீதும் சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும்' என்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக