லேபிள்கள்

28.6.18

பள்ளி பாடத்தில் அரசியலமைப்பு சட்டம்

''பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில், அரசியலமைப்பு சட்டம் குறித்த பாடம் இடம்பெற, அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்., - காளிமுத்து: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கல்வி மாவட்டம் உருவாக்க, அரசு முன்வருமா?அமைச்சர் செங்கோட்டையன்: உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, புதிய கல்வி மாவட்டம் துவக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.காளிமுத்து: பல பள்ளிகளுக்கு, கட்டடம் இல்லாமல் உள்ளது. அவற்றுக்கு, கட்டடம் கட்ட வேண்டும்.அமைச்சர் செங்கோட்டை யன்: மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப, கூடுதல் கட்டடங்கள் கட்ட, நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., - இன்பதுரை: அரசு பள்ளிகளில், அரசி யலமைப்பு சட்டத்தை கற்றுத் தர, பாடத் திட்டம் ஏற்படுத்தப்படுமா?அமைச்சர் செங்கோட்டை யன்: சட்டம் என்பது தனிப் பிரிவு. எனினும், உறுப்பினர் கேட்டுக் கொண்டபடி, அரசியலமைப்பு சட்டத்தை, 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடத் திட்டத்தில் சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக