லேபிள்கள்

14.5.13


பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று கடைசிநாள்
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று பிற்பகல் 1 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அறிவித்துள்ளார்.

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க (மே 13) கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது மாணவர்களின் நலன் கருதி ஒரு நாள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.ஆனால், வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கு இன்று கடைசி நாள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

விண்ணப்ப எண்: ஏற்கெனவே ஆன்-லைன் மூலம விண்ணப்பித்து விண்ணப்பித்த பாடத்துக்கான பத்து இலக்க எண் தெரியாதவர்கள் மீண்டும்  www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமே அந்த எண்ணைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை வைத்துத்தான் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும்
.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக