லேபிள்கள்

15.5.13


ஒரே பள்ளியில் 3 ஆண்டுக்கு மேல் வேலை பார்த்தால் டிரான்ஸ்பர் : அரசு உத்தரவு வெளியீடு - நாளிதழ் செய்தி
அரசு பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் ஆசிரியர்கள் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவு இந்த ஆண்டும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர் நலனுக்காக வெளிப்படையான ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் இடையே 201314ம் கல்வியாண்டில் பொது மாறுதல்கள் வழங்க கீழ்க்காணும் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

* 3
ஆண்டுகளுக்கு மேல் அரசு பணியாளர்கள் ஒரே இடத்தில் பணியாற்ற கூடாது என்ற பொதுவான ஆணை உள்ளது. இது 201314ம் கல்வியாண்டிலும் தொடரும். ஒரு ஆசிரியருக்கு டிரான்ஸ்பர் தருவதற்காக காரணம் ஏதுமின்றி வேறொரு ஆசிரியரை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது.

*
புகாருக்கு உள்ளாகும் அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக அடிப்படையிலான டிரான்ஸ்பர் ஆணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதலில் வழங்க வேண்டும். டிரான்ஸ்பர் வழங்கப்பட்ட பிறகு, அந்த புகார் உரிய அலுவலரால் விசாரிக்கப்படும். புகாருக்கு முதல்நிலை ஆதாரம் இருந்தால், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது என சம்பந்தப்பட்ட கோப்பில் விவரம் பதிவு செய்யப்பட வேண்டும்.

தொடக்க கல்வி துறையை பொருத்தவரை ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அளவில் முதலிலும் அடுத்து மாவட்டத்துக்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை பொருத்தவரை வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.

*
சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவின்படி, மாநில முன்னுரிமைப்படி நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மாவட்ட மாறுதல் கிடையாது. விண்ணப்பம் அளித்து மாவட்டத்துக்குள் மாறுதல் பெறலாம்.
*
கடந்த கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்கள் மாறுதல் பெற்ற இடத்தில் முழுமையாக ஒரு கல்வியாண்டு பணியாற்றி இருக்க வேண்டும். 201213ல் பணிநிரவல் பெற்றவர்கள், முற்றிலும் பார்வையற்றவர்கள், மாற்று திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவி, இதயம் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள், விதவைகள் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்கலாம்.

*
கணவன் அல்லது மனைவி திடீரென்று விபத்திலோ, நோய்வாய்ப்பட்டு இறந்தாலோ அத்தகைய ஆசிரியர்களுக்கு பொது விதிமுறைகளை கடைபிடிக்காமல் சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.
 
 
*
மனமொத்த (மியூச்சுவல்) மாறுதல் அடிப்படையில், மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள், தற்போது பணிபுரியும் பள்ளியில் ஒரு கல்வி ஆண்டு முழுமையாகப் பணிபுரிந்திருக்க வேண்டும். தமிழக பள்ளிக்கல்வி துறை கடந்த 9ம் தேதி வெளியிட்ட அரசாணை (1டி) எண் 129ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக