பிளஸ் 2 மறுகூட்டல்: சலானை பதிவிறக்கம் செய்யத் தவறியவர்களுக்கு மாற்று வழி:
பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்மாணவர்களில், ஆன்-லைனில் சலானை பதிவிறக்கம் செய்யத்தவறியவர்களுக்கு மாற்று வழியை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், விண்ணப்பிக்கும்போது தங்களுடைய விவரங்களைப் பூர்த்தி செய்த பின்னர் 10 இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைசீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யத் தவறும் மாணவர்கள், தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, பாடம், எதற்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்ற விவரம் (விடைத்தாள் நகல் அல்லது மறு கூட்டல்), மாணவரின் பெயர், முகவரி, செல்பேசி எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை dgehelpline@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி, 10 இலக்க விண்ணப்ப எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது 044 - 28203089, 28221734 ஆகிய எண்களுக்கு ஃபேக்ஸ்
அனுப்பியும், 044 -
28278286, 28264513 ஆகிய தொலைபேசி எண்களை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக