லேபிள்கள்

28.8.14

மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: செப்., 15க்குள் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய உத்தரவு

அடுத்த மாதம், 15க்குள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான சொத்து மதிப்பை, தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசு, உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்தியில், பா.ஜ., தலைமையிலான புதிய அரசு, நேர்மையான நிர்வாகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழலுக்கு எதிரான லோக்சபால் சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில், தீவிரம் காட்டி வருகிறது.இதன்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும், 23 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும் என, ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.சொத்து மதிப்பை தாக்கல் செய்வதற்கான, இந்தாண்டுக்கான காலக்கெடு, அடுத்த மாதம், 15க்குள் முடிவடைகிறது.இந்த உத்தரவின்படி, பியூன் தவிர மற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தங்களிடம் உள்ள வாகனங்கள், தங்கம், தங்க நகை, வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு, பத்திரங்கள், இன்சூரன்ஸ் பாலிசி, கடன் உள்ளிட்ட விவரங்களை, முறையான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, உரிய அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும்.ஆனாலும், ஒரு ஊழியரின் நான்கு மாத அடிப்படை சம்பளத்தின் மொத்த தொகை, இரண்டு லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர், இந்த சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக