லேபிள்கள்

26.8.14

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணைநிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண்ணைநிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர்
தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


தமிழ் பட்டதாரி ஆசிரியர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர்பவுசிநேசல் பேகம்(வயது 38). இவர்மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
நான்பி.லிட்(தமிழ்)., பி.எட்., படித்துள்ளேன்மேலும்தமிழ் பண்டிட்பயிற்சியும் முடித்துள்ளேன்நான்பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்சமூகத்தை சேர்ந்தவள்கடந்த 18.8.2013 அன்று நடந்த பட்டதாரிஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் 150 க்கு 94 மதிப்பெண்பெற்றேன்இதைதொடர்ந்து சான்றிதழ்   சரிபார்ப்புக்குஅழைக்கப்பட்டேன்பின்புதகுதித்தேர்வில் எடுத்த   மதிப்பெண்,‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் ஆகியவற்றை கணக்கிட்டு  தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய  இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
மறுத்து விட்டது
நான்,100 க்கு 60.86 மதிப்பெண்கள் பெற்றதாகவும்பிற்படுத்தப்பட்ட  முஸ்லிம்களை பொறுத்தமட்டில் 61.44 கட் ஆப் மதிப்பெண்ணாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு  உள்ளதுபிளஸ்-2, பி.லிட்., பி.எட்., ஆகியவற்றில் நான் பெற்ற  மதிப்பெண்கள்வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்காகஎடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுஇதன்படி எனக்கு, 60.86 மதிப்பெண்வழங்கப்பட்டுள்ளதுபி.லிட்., பி.எட்., படித்தவர்களும்,   பி.லிட்.,படித்துதமிழ் பண்டிட் முடித்தவர்களும் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்குதேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்பி.லிட்., பி.எட்., படித்தவர்களுக்குபி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காககணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறதுபி.லிட்., படித்து தமிழ் பண்டிட்முடித்தவர்களுக்கு தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில்எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கட்-ஆப் மதிப்பெண்
நான்பி.எட்., முடித்துள்ளேன்அதே போன்று தமிழ் பண்டிட்டும்முடித்துள்ளேன்தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணைவெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டால்ஆசிரியர் தேர்வு வாரியம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்குநிர்ணயித்துள்ள கட்-ஆப் மதிப்பெண்ணை விட அதிகமாக 62.13மதிப்பெண்கள் பெற்று விடுவேன்பி.எட்., படிப்பில் பெற்றமதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில்எடுத்துக்கொண்டதால் எனக்கு கட்-ஆப் மதிப்பெண்கிடைக்கவில்லைஎனவே நான்தமிழ் பண்டிட் படிப்பில் பெற்றமதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில்எடுத்துக்கொண்டு பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிடவேண்டும்இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஇருந்தது.
நோட்டீசு

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்குவந்தது.மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜராகிவாதாடினார்மனுவை விசாரித்த நீதிபதிஇந்த வழக்கு சம்பந்தமாகபள்ளிக்கல்வித்துறை செயலாளர்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியசெயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்பஉத்தரவிட்டார்மேலும்,பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனங்கள்அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தேஇருக்கும்என்றும் அவர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக