வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -
தங்கள் சொந்த மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம் தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில் அடுத்த நாள் நடைபெறும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள் பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம் இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால் முறைப்படி அறிவிக்கப்படும்).
வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு எனும் போது, மாநில அளவில் தங்கள் தர எண் பார்க்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தர எண் (From .... to....) பெற்றுள்ளவர்கள் மட்டும் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தங்களுக்கான காலிப்பணியிடங்கள் கணினி திரையில் வந்து கொண்டே இருக்கும். (Scroll Down Type)
தங்களுக்கு முந்தைய நபர் எந்த மாவட்டத்தில் எங்கு உள்ளாரோ அவருக்கு உரிய நேரத்தில் அவர் தனக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க இயலும். அவர் தேர்ந்தெடுத்த இடம் உறுதிபடுத்தப்பட்ட பிறகே அடுத்த தர வரிசை எண் உள்ளவர் எந்த மாவட்டத்தில் உள்ளாரோ அங்கு கணினி உயிர்பெறும். இதுபோன்று தங்களுக்கான நேரம் வரும் போது தாங்கள் தங்கள் பள்ளியை தேர்ந்தெடுக்க இயலும். மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும் போது தேர்வர்களுக்காக வழங்கப்பட்ட நேரத்தை விட வேறுமாவட்டத்தை தேர்ந்தெடுப்பர்வர்களுக்கு மிக குறைந்த நேரமே வழங்கப்படும். எனவே அதற்கு தக்கபடி தயாராக இருக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக