லேபிள்கள்

29.8.14

மாணவர்களுக்கு பயிற்சி ஏடு வழங்கும் திட்டம் துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு, கையெழுத்து பயிற்சி ஏடு, ஓவியப் பயிற்சி ஏடு, நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ?ம் வகுப்பு முதல், ?ம் வகுப்பு வரை படிக்கும், 45.76 லட்சம் பேருக்கு, கையெழுத்து பயிற்சி ஏடு. முதல் வகுப்பு முதல், ?ம் வகுப்பு வரை படிக்கும், 63.18 லட்சம் பேருக்கு, ஓவியப் பயிற்சி ஏடு. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு வழங்கப்படும். இதற்கு, 8.10 கோடி ரூபாய் செலவாகும் என, கடந்த மாதம், 30ம் தேதி, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தலைமை செயலகத்தில், நேற்று, இத்திட்டங்களை, முதல்வர் துவக்கி வைத்தார். ஏழு மாணவர்களுக்கு, கையெழுத்து பயிற்சி ஏடு, ஓவியப் பயிற்சி ஏடு, பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேட்டை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக